​சினிமா ரசிகன் எனும் நான்..,

மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கில் (தற்போதைய சண்முகா) Alien vs Predator படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வாடிப்பட்டியில் இருந்து பேருந்தில் நானும் என் அண்ணனும் வந்து பார்த்தோம்.

புதுப்பேட்டை, வல்லவன் படங்களை முதல் நாள் பார்த்திருக்கிறேன்.

சென்னையில் தனியாக நான் மட்டும் சிவாஜி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை பார்த்தேன்.

மதுரையில் தனியாக மாநாடு, நெஞ்சம் பார்ப்பதில்லை பார்த்திருக்கிறேன்.
10ம் வகுப்பு பொது தேர்வுக்கு ஒரு வாரம் முன் ஆளவந்தான் படத்தை தனியாக வாடிப்பட்டி கிருஸ்ணா திரையரங்கில் பார்த்தேன்.

Thermal printing print got disappeared. Year 2008 theater tickets

முதன் முதலில் அமேரிக்கா சென்ற போது அங்கே Saw 5 படம் பார்த்தேன் அதன் டிக்கெட் இன்றும் என் பர்சில் உள்ளது. பிறகு லாஸ் ஏஞ்செல்ஸ் யுனிவர்சல் ஸ்டுடியோவில் உள்ள திரையரங்கில்  Avengers Endgame படம் பார்த்தேன். சிங்கப்பூரில் எந்திரன் திரைப்படமும், துபாயில் கைதி திரைப்படமும் நண்பர்களுடன் பார்த்துள்ளேன்.

Netflix வருவதற்கு முன் Torrent மூலம் பல ஆங்கில / சீன படங்களை பார்த்திருக்கிறேன். Popcorn Time மூலம் பார்த்த படங்கள் கணக்கில் அடங்காதவை.

சில படங்களை பல முறை பார்த்துள்ளேன்., The Prestige, V for Vendetta, ​Van Helsing, ​The Forbidden Kingdom,​ Alien vs Predator,​ மைக்கேல் மதன காமராஜன்,​ Apocalypto கர்ணன் (old), Pirates of the Caribbean , American Pie, சூது கவ்வும், மரகத நாணயம், ​

ஒரு படத்தை பார்க்கும் போது சென்சார் சர்டிபிகேட்டில் இருந்து கடைசியில் endcredit bloopers / easteregg scenes வரை பார்ப்பேன். இடையில் திரையை தவிர தலை திரும்பாது, மிக அரிதாக அதிக உணர்ச்சியில் அடுத்த காட்சி இப்படி இருக்கும் பாரு என என் அருகில் உள்ள நண்பரிடம் மட்டும் சொல்வேன். சிறு வயதில் ஓ போடு பாடலுக்கு நண்பர்களுடன் திரையரங்கில் ஆடியுள்ளேன். தற்போது யாரேனும் திரையை பார்த்து பதில் வசனம் பேசினால் ரசிக்க மாட்டேன். திரையரங்கில் தேசிய கீதம் இசைப்பது வலிந்து திணிக்கப்பட்ட சடங்காக பார்க்கிறேன். என் மனநிலை, என் உடன் வந்திருக்கும் நண்பர்களை பொறுத்து அவர்களின் மனநிலை பொறுத்து எந்திரிச்சு நிக்கலாமா வேணாமா என முடிவெடுப்பேன். எந்த வெளக்கெண்ணை கூடவும் பேசும் மனநிலையில் நான் இல்லை என்றால் மட்டும் எழுந்து நிற்பேன்.

​கயிறு கட்டி பறக்காத சண்டை காட்சிகள்,
ஒரு நாள் அல்லது இரண்டு நாள் நடப்பது போன்ற திரைக்கதை,
நடனம் இல்லாத பாடல்கள்,
நடிகர்கள் வாய் அசைக்காமல் பின்னனியில் மட்டும் வரும் பாடல்கள்,

இருந்தால் அந்த படம் மிகவும் பிடிக்கும்.

நச்சரிக்கும் கதாபாத்திரம் இருந்தால் மிக மிக எரிச்சலடைவேன். உதாரணம்: தசாவதாரம் படத்தில் அசின்.
தேவையற்ற அதிக முக பாவனைகள் கூட எரிச்சலை ஏற்படுத்தும்.

ஒரு காட்சியில் வைக்கப்படும் கேமரா ஆங்கிள் பொறுத்து அடுத்து எந்த இடத்தில இருந்து அடுத்த கதாபாத்திரம் காட்சிக்குள் வரப்போகிறது என்பதை கணிப்பேன். அதை பொறுத்து வைக்கப்படும் சஸ்பென்ஸ் இப்படி உடைய போகிறது என அனுமானிப்பேன்.

சில விஷயங்களை நிஜ உலகில் பார்த்துள்ளதால், திரையில் அந்த காட்சிகளில் உள்ள போலித்தனம் ஒருவித “என்னப்பா…” எனும் சலிப்பை ஏற்படுத்தும். உதாரணம்: லாஸ் வேகாஸ், மியாமி நகரங்களில் உள்ள விளையாட்டு தளங்களில் உண்மையான துப்பாக்கிகளை, பிஸ்டல், ak
47, மிசின்கன், பறக்கும் களிமண் தட்டுகளை சுடுதல், 2கிமீ தூரம் சுடும் பெரிய ரக ஸ்னைப்பர்  போன்றவற்றை சுட்டுள்ளதால்.. படங்களில் சுடும் போது “அந்த துப்பாக்கில சுட்டா சத்தம் மட்டும் காதை எப்படி கிழிக்கும் தெரியுமா…” என என் மனதுக்குள்ளே சொல்லிக்கொள்வேன். கண் கண்ணாடி இல்லாமலும், காதுக்கு noise cancellation ஹெட் செட் இல்லாமலும் சுட்டுக்கொண்டே இருந்தால் சுடுற ஆளுக்கு தான் அதிக காயம் பட வாய்ப்புள்ளது.

அதே போல திருவிழா எனும் பெயரில் வைக்கப்படும் காட்சிகளில் உள்ள 70% விஷயங்கள் பல திருவிழாக்களில் இருக்கவே இருக்காது.

உலக அளவில் மட்டமான திரைக்கதைக்கு பேய் படங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் நேர்த்தியான திரைக்கதையில் எடுக்கப்பட்ட அரிதிலும் அரிதான பேய் படங்களும் உள்ளன. The Sixth Sense

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் முழு திரைக்கதை காட்சி வாரியாக இணையத்தில் இருந்து பதிவிறக்கி வாசித்துள்ளேன். John Wick திரைப்படம் பார்த்து முடித்து அடுத்த நொடியே இரண்டாம் பாகம் வந்துள்ளதா என தேடி அப்படியே இரண்டாம் பாகம் பார்த்தேன். மூன்றாம் பாகம் வெளியான முதல் நாளே கணினியில் பார்த்தேன்.

சில படங்கள் மாபெரும் வெற்றி என தெரியும், அதன் பின்னணி இசை மட்டும் ஆங்காங்கே இணையத்தில் கேட்டுக்கொண்டே இருக்கும் .. அத்தகைய படங்களை மிக மிக தாமதமாக பல மாதங்கள் / சில வருடங்கள் கழித்து பார்த்துள்ளேன். அத்தகைய படங்களை பார்க்கும் முன் அவற்றின் விமர்சனம், ட்ரைலர், பாடல் வீடியோ காட்சி என எதையும் கண்டிப்பாக பார்க்கவே மாட்டேன். அப்படி பார்த்த படங்கள் KGF , வட சென்னை, அசுரன். ஒரு காட்சி , கதை லேசாக தெரிந்து விட்டாலோ படம் பார்க்கும் ரசனையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இன்னும் கர்ணன் (தனுஷ்) பார்க்கவில்லை, இதே பிரச்னை புதிய விக்ரம் 2 வந்துவிடும் என அஞ்சி முதல் நாளே விஷால் மாலில் இரவு காட்சி பார்த்தேன். பிறகு மீண்டும் ஒருமுறை சோலைமலை திரையரங்கில் பார்த்தேன்.

2006 வாக்கில் மதுரை கல்லூரியில் படித்த போது God Mother என ஒரு சிறு மொக்கை குறும்படத்தை நண்பன் அருண் சத்யனுடன் இணைந்து இயக்கி எடுத்தேன்.

கும்படங்கள் பல பார்த்து ரசித்துள்ளேன்.. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி படங்களை விரும்பி பார்த்துள்ளேன்.
சார்லி சாப்ளின் படங்கள் , Mr Bean  படங்கள், நாடகங்கள் விரும்பி பார்ப்பேன். Series / WebSeries பல பார்த்துள்ளேன். விமானத்தில் பயணிக்கும் போது பார்த்த Succession , Last Man on Earth போன்ற தொடர்களையும் , The Intern போன்ற படங்களையும் மீண்டும் தொடர்ந்து பார்த்துள்ளேன்.

Breaking bad, Money Heist, Better Call Saul , Two and Half Man , Squid Game, Mad Men , Suits  போன்ற தொடர்களை முழுமையாக பார்த்துள்ளேன்.

Silicon Valley , Big Bang Theory தொடர்களை முழுமையாக பார்க்கவில்லை ஆனால் அவை இரண்டின் நகைச்சுவைகளை மிகவும் விரும்புகிறேன்.

சங்க காலத்திற்கு முன் நடப்பது போல எடுக்கப்பட்ட பாலை திரைப்படத்தை பார்க்க தவறி விட்டேன்.

மிக பழைய தமிழ் படங்களில் வரும் பாடல்கள் நிறைந்த படமான Sweeney Todd: The Demon Barber of Fleet Street படமும் பிடித்து பார்த்துள்ளேன்.  இந்த ரக படம் தான் பிடிக்கும், இந்த நடிகர் படம் பிடிக்கும் பிடிக்காது எனும் கணக்கு என்னிடம் இல்லை. அணைத்து ரக, அணைத்து நடிகர் படங்களையும் பார்ப்பேன். அனால் இந்த இயக்குனரின் தீவிர ரசிகன், இந்த நடிகரின் தீவிர ரசிகன் என முழுமையாக என்னை அடையாளப்படுத்தமுடியவில்லை.  ஒரு அதி சிறந்த இயக்குனரிடம் இருந்தோ, நடிகரிடம் இருந்தோ என்னை ரசிக்க வைக்காத படமோ அல்லது காட்சியோ வந்துவிடும். தொடர்ந்து ரசிக்க முடியாத இயக்குனர், நடிகர் எதோ ஒரு இரு காட்சிகளை நன்றாக எடுத்து வைத்திருப்பார். ஆக., திரையில் தெரியும் இறுதி படைப்பிற்கு நான் ரசிகனாக இருப்பேன் மிகவும் பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் பார்ப்பேன். திரை படைப்பு என்பது பல படைப்பாளிகளின் தொகுப்பான உழைப்பின் படைப்பு வெளிப்பாடு. யாரேனும் ஒரு சிலர் சிறப்பான பங்காற்றி இருக்க வாய்ப்புள்ளதால் அனைத்தையும் வெறுப்பின்றி பார்க்க ஆரம்பிப்பேன், பிடித்தவற்றை ரசிப்பேன்.

சில நடிகர், நடிகைகளை நேரில் பார்த்துள்ளேன் .. அவர்களுடன் நின்று படம் எடுக்க வேண்டும் என விரும்பியதில்லை. ஆனால் ப்ரூஸ்லீ மெழுகு சிலையை ஹான்கோங்கில் பார்த்த போது ஆர்வமாக பல படங்களை உடன் நின்று எடுத்தேன்.

திரை துறைக்குள் நான் இனி நுழைவேனா (இன்று 30-09-2022) என தெரியவில்லை., ஆனால் திரைக்கதை எழுதுவதிலும், காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் வைப்பதிலும், வசனம் எழுதுவதிலும், கதாபாத்திரம் வடிவமைப்பிலும், பின்னணி கலை வடிவமைப்பிலும் ஆர்வம் உள்ளது. நண்பர்கள் யாரேனும் இயக்குனராக இருக்கும் பட்சத்தில் மேற்கண்டவற்றில் உருவாக்கமோ, சீர்திருத்தமோ செய்து வழங்க ஆர்வமாக இருக்கிறேன்.
என்னிடமும் சில கதைகள் திரைப்படமாக்கும் அளவு உள்ளது, அவற்றிற்கான திரைக்கதை எழுதி பின்னாள் படம் எடுக்க வாய்ப்புள்ளது.