பள்ளிக் காலத்திலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் கால் பாதிக்க திட்டமிட்டு திறன் வழக்கும் வழிகள்

“பசங்க கேள்விகள் சில தயாரித்து வைச்சுருக்காங்க.. தவறாம வந்துடு” என்ன சொன்னார் எனது கணினி ஆசிரியர் திரு. கார்த்திக் சார். சரியா 11.30க்கு “சார் கேட் முன்னாடி தான் கார்ல இருக்கேன்… கேட் யாராவது திறந்து விட்டா உள்ள வந்துடுவேன்ன்னு” சொன்னேன். அவர் நான் கேட் முன்னாடி தான் இருக்கேன் கார் ஏதும் இல்லையே என்றார். அவரே… “எந்த ஸ்கூல்லபா இருக்க?” எனக் கேட்டார். நான் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்தேன்… அப்பொழுது தான் தெரிந்தது நான் பேச வேண்டிய இடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று.. அவரை பார்த்ததும் நான் சொன்ன விசயம்.. “கேள்வி லாம் பசங்க தயாரித்து வச்சதா .. சொன்னீங்க.. அப்பவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு சார்.” மதுரை வாடிப்பட்டி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11/12ம் வகுப்பு கணினி துறை மாணவிகளிடம், தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு பெற, எப்படி தங்களுக்கு எந்த துறை ஏற்றது, அதற்கு தேவையான திறன் வளர்க்க, கற்க இணைய வெளியில் உள்ள வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில்(16-மார்ச்-2022) பங்கேற்று அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். பல கல்லூரிகளில் பேசி இருந்தாலும், தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் மதுரை கல்லூரி (கணிதம் / கணினி) துறைகளின் பாடத்திட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அவர்கள் ஆலோசனை கேட்டபோது அதில் பங்களித்து இருந்தாலும்.. நமது ஊரில் நமது தமிழ் வழிக் கல்வி அரசு பள்ளியில் கலந்துரையாடியதை மிகவும் பொறுப்புமிக்க அதே நேரத்தில் மகிழ்வான நிகழ்வாகக் கருதுகிறேன்.

நான் பேசிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு ஆவணம் இங்கே உள்ளது